Sunday, January 17, 2016

வேர்கடலை கொழுப்பு அல்ல ...!
ஒரு மூலிகை…!!
நிலக்கடலை குறித்த மூட நம்பிக்கைகள் அவ நம்பிக்கைகள் இந்தியாமுழுவதும் சர்வதேச நிறுவனங்களால் திட்டமிட்டு பரப்பிவிடப்பட்டுள்ளது.
நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் நிலக் காய்பிடிக்கும் பருவத்துக்கு பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை காணலாம் . நிலக்கடலை செடியை சாப்பிடும் ஆடு, மாடு, நாய், வயல் வெளியே சுற்றி உள்ள பறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவது இதற்கு நல்ல உதாரணம்.
நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் கர்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியம். எனவே நிலக் கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப் பேறும் உடன் உண்டாகும். தினமும் பெண்கள் எடுத்துக் கொண்டால் மகப்பேறு நன்றாக இருக்கும். கருவின் மூளை மற்றும் நரம்பு வளர்ச்சி சிறப்பாக அமையும். கருத்தரிப்பதற்கு முன்பே உண்பது மிக மிக உத்தமம். இல்லையேல் கருவுற்ற பின்னும் எடுத்துக் கொள்ளலாம்.

நீரழிவு நோயை தடுக்கும்:
நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது.மாங்கனீஸ் சத்துமாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது . நாம் உண்ணும்உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.
பித்தப் பை கல்லைக் கரைக்கும்:
நிலக்கடலையை தினமும் 30 கிராம் அளவுக்கு தினமும் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும். 20 வருடம் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.
இதயம் காக்கும்:
நிலக் கடலை சாப்பிட்டால் எடை போடும் என்று நாம் நினைக்கிறோம். உண்மையல்ல. மாறாக உடல் எடை அதிகமாகாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் நிலக்கடலை சாப்பிடலாம். நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்துநிறைந்துள்ளது . இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. இதய நோய்கள் வருவதையும்தடுக்கிறது. இதுவே மிகச் சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாக திகழ்கிறது.
இளமையை பராமரிக்கும்
இது இளமையை பராமரிக்க பெரிதும் உதவுகிறது.நிலக்கடலையில் பாலிபீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது நமக்கு நோய்வருவதை தடுப்பதுடன் இளமையை பராமரிக்கவும் பயன்படுகிறது.
ஞாபக சக்தி அதிகரிக்கும்:
நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக் போன்றது. நிலக்கடலையில் மூளை வளர்ச்சிக்கு பயன்படும் விட்டமின் 3 நியாசின் உள்ளது. இது மூளைவளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் பெரிதும் பயனளிக்கிறது. ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.
மன அழுத்தம் போக்கும்:
நிலக்கடையில் பரிப்டோபான் என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இந்த வகை அமினோ அமிலம் செரட் டோனின் என்ற மூளையை உற்சாகப்படுத்தும்.உயிர் வேதிப் பொருள் உற்பத்திக்கு பயன்படுகிறது.செரட்டோனின் மூளை நரம்புகளை தூண்டுகிறது.மனஅழுத்தத்தை போக்குகிறது. நிலக்கடைலையை தொடர்ந்து சாப்பிடுவோருக்கு மன அழுத்தத்தைப் போக்குகிறது
.
கொழுப்பை குறைக்கும்
:
தலைப்பை படிப்பவர்களுக்கு ஆச்சரியம் ஏற்படலாம்.ஆனால் அதுதான் உண்மை. நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்பு சத்து அதிகமாகும் என்று நம்மில் பலரும்நினைத்திருப்போம். ஆனால் அதில் உண்மையில்லை.மாறாக மனிதனுக்கு நன்மை செய்யும் கொழுப்பு தான் நிலக்கடலையில்உள்ளது. நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது நமது உடலின் தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது. 100 கிராம் நிலக்கடலையில் 24 கிராம்மோனோ அன் சாச்சுரேட்டேட் வகை கொழுப்பு உள்ளது. பாலிஅன்சாச்சுரேட்டேடு 16கிராம் உள்ளது.
இந்த இருவகை கொழுப்புமே நமது உடம்புக்கு நன்மைசெய்யும் கொழுப்பாகும். பாதாமை விட நிலக்கடலையில் நன்மை செய்யும் கொழுப்பு அதிகமாக உள்ளது. நிலக்கடலையில் உள்ள ஒமேகா-3 சத்தானது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
அமெரிக்கர்களை கவர்ந்த நிலக்கடலை:
உலக அளவில் சீனாவிற்கு அடுத்து இந்தியாவில்தான் நிலக்கடலை அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது.இவ்விரு நாடுகளின் மக்கள்பெருக்கத்திற்கும் நிலக்கடலை முக்கிய காரணமாகும். இந்தியாவில் குழந்தைப் பேறுக்கான மருந்துகளின் விற்பனைவாய்ப்புக்கு நிலக்கடலை உண்ணும் வழக்கம் தடையாக இருக்கிறது மற்றும் சில இதய நோய்க்கான மருந்துகளை விற்பனை செய்ய முடியவில்லை. எனவே இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்களை பரப்பி நிலக்கடலை மற்றும் நிலக்கடலைஎண்ணெய் வகைகளை பயன்படுத்துவதை தடுத்துவிட்டார்கள். இதன் காரணமாக குழந்தையில்லாத தம்பதிகள் பெருகிவிட்டார்கள்.
கடந்த 20 வருடமாக இந்தியாவில் நிலக்கடலையின் விலை பெரியமாற்றம் ஏதும் இல்லாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இதே கால கட்டத்தில் அமெரிக்கர்களின் உணவில்நிலக்கடலையின் பங்கு 15 மடங்கு கூடி இருப்பதுடன் விலையும் கூடிஇருக்கிறது. இந்தியர்கள் அனைவரும் நிலக்கடலை சாப்பிட ஆரம்பித்தால் அமெரிக்கர்கள்நிலக்கடலை அதிகம் விலை கொடுத்து சாப்பிட வேண்டும் என்று கருதிதான் இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது.
கருப்பை கோளாறுக்கு முற்றுப்புள்ளி:
பெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலை சீராக்குகிறது. இதனால் பெண்களுக்கு விரைவில் குழந்தை பேறு ஏற்படுவதுடன் பெண்களுக்கு ஏற்படும் மார்பகக் கட்டி உண்டாவதையும் தடுக்கிறது.பெண்களுக்கு பெரிதும் தேவையான போலிக் அமிலம்,பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம்,இரும்பு, விட்டமின்கள், குறுட்டாமிக் அமிலம் நிலக்கடலையில் நிறைந்துள்ளது. இதன் காரணமாக பெண்களுக்கு கருப்பை கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.
நிறைந்துள்ள சத்துக்கள்:
100கிராம் நிலக்கடலையில் கீழ்க்கண்ட சத்துக்கள் நிறைந்துள்ளது.
கார்போஹைட்ரேட்- 21 மி.கி.
நார்சத்து- 9 மி.கி.
கரையும்(நல்ல HDL) கொழுப்பு – 40 மி.கி.
புரதம்- 25 மி.கி.
ட்ரிப்டோபான்- 0.24 கி.
திரியோனின் – 0.85 கி
ஐசோலூசின் – 0.85 மி.கி.
லூசின் – 1.625 மி.கி.
லைசின் – 0.901 கி
குலுட்டாமிக் ஆசிட்- 5 கி
கிளைசின்- 1.512 கி
விட்டமின் -பி1, பி2, பி3, பி1, பி2, பி3, பி5, பி6, சி
கால்சியம் (சுண்ணாம்புச்சத்து) – 93.00 மி.கி.
காப்பர் – 11.44 மி.கி.
இரும்புச்சத்து – 4.58 மி.கி.
மெக்னீசியம் – 168.00 மி.கி.
மேங்கனீஸ் – 1.934 மி.கி.
பாஸ்பரஸ் – 376.00 மி.கி.
பொட்டாசியம் – 705.00 மி.கி.
சோடியம் – 18.00 மி.கி.
துத்தநாகச்சத்து – 3.27 மி.கி.
தண்ணீர்ச்சத்து – 6.50 கிராம்.
போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. போலிக் ஆசிட் சத்துக்களும் நிரம்பி உள்ளது.
பாதாம், பிஸ்தாவை விட சிறந்தது:
நாம் எல்லாம் பாதாம், பிஸ்தா,முந்திரிப்பருப்புகளில்தான் சத்து அதிகம் உள்ளது என்று கருதுகிறோம். அது தவறு. நிலக்கடலையில் தான் இவற்றை எல்லாம் விட அளவுக்கதிகமான சத்துக்கள் உள்ளன. நோய்எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குதான் உண்டு.
நன்றி - இணையம்.

வேர்கடலை கொழுப்பு அல்ல ...! ஒரு மூலிகை…!!

எகிப்தில் வாழ்ந்தவர்கள் தமிழர்கள்!!!
பல ஆதரங்களுடன் விளக்கும் ஆய்வாளர்கள்!!!
கி.மு.6000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழர் அங்கு வாழ்ந்தனர். “Comparison of Badalian and primitive Indian Races" என்ற நூலில் பிரெந்தர் ஸ்தொதியார் என்ற ஆய்வாளர், 1927ல் எகிப்தில் தோண்டியெடுக்கப்பட்ட மண்டை ஓடுகள் தமிழர்களுடையவை என்பதை ஆய்வு மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்.
நைல் நதிக்கரையில் வாழ்ந்த ஜெர்சியர்கள் தமிழர் மரபில் வந்தவர்கள் என்று ஒக்ரான் (Autran) என்ற ஆய்வாளர் உறுதி செய்கிறார். நைல் நதி என்பதும் ஒரு தமிழ் வார்த்தை தான். நீல நதி என்பது தான் நைல் நதியாக திரிந்துவிட்டது. தமிழர்கள் நீல நதி என்று சொன்னதைத்தான் அப்படியே Nilo (நீலோ) என இத்தாலியிலும், அதை Nile (நைல்) என்றுஆங்கிலத்திலும் சொல்லப்படுகிறது.


இறந்தவர்களை புதைப்பது தமிழர் மரபு. எரிக்கும் இடம் சுடுகாடு, புதைக்கும் (இடும்) இடம் இடுகாடு.
எளிய மனிதர்கள் இறந்தால் சிறுகுழி வெட்டி அதில் இட்டு புதைப்பர். அதற்கு சிற்றிடு (சிறு +இடு) என்று பெயர்.
அரசன் போன்ற உயர்நிலை மக்கள் இறக்கும்போது, பெரும் அளவில் கட்டடம் எழுப்பி அதில் இடுவர். பெரிய அளவில் இடப்படுவதால் (அடக்கம் செய்யப்படுவதால்) அது பெரும்+இடு = ”பெருமிடு” என்று அழைக்கப்பட்டது. அதுவே ‘பிரமிடு’ என்று ஆனது.
ஆக, பிரமிடு என்பது தூய தமிழ்ச்சொல். தூயத் தமிழ்ச் சொல் ஆளப்பட்ட இடம் தமிழர்கள் வாழ்ந்த இடமாகும் அங்குக் கட்டப்பட்டதும் அவர்கள் கட்டியவை என்பது உறுதியாகிறது.
Edward pokoke (1604-1691) என்ற ஆய்வாளர், Indian in Greece என்ற நூலில் சிந்து சமவெளி மக்களும், எகிப்தில் வாழ்ந்தவர்களும் ஒரே இனமக்கள், அவர்கள் சிந்து வெளிப் பகுதியிலிருந்து, பெர்சிய வளைகுடாவைக் கடந்து Oman, Hadramont, Yeman கரை வழியாக எகிப்து, நபியா, அபிசினியா பகுதியில் பரவினர் என்கிறார். சிந்து சமவெளி பகுதியிலும் தமிழ் நாகரிகம் இருந்ததற்கான பல ஆதாரங்கள் உள்ளது....
Adolf Erkman (1854-1937) Life in ancient Egypt என்ற நூலில் பாண்டிய நாட்டவர்கள் (தமிழர்கள்) எகிப்தில் பரவி எகிப்திய நாகரிகத்தை உருவாக்கினர் என்கிறார்.
siatic researchers (vol.III.1702) வெளிவந்த கட்டுரையில் British Lt.colonel wilford, பல சான்றுகளைக் காட்டி, பழங்கால தமிழர்கள் எகிப்தில் குடியேறியதைத் தங்கள் குடியேற்ற நாடாக்கினர் என்கிறார்.
"Heinrich Kari Brugsh" - "History of Egypt" என்ற நூலில் தமிழர்கள் 8000 ஆண்டுகளுக்கு முன் எகிப்தில் குடியேறி தங்கள் கலை மற்ற உன்னத நாகரிகத்தை அங்கு நிலை நாட்டினர்.
இதே கருத்தை Bengsch Bey என்ற எகிப்திய வரலாற்றாசிரியரும் கூறுகிறார்.
“எகிப்து நாகரிகம் பண்டைய தமிழர் நாகரிகம் என்பது அய்யத்திற்கு இடமின்றி தெரிகிறது, என்கிறார். Louis Jacolliot (1837 - 1890) என்ற பிரஞ்சுக்காரர் Bible dane l"Inde)
LIliane Hornbergar என்ற பிரஞ்சு அறிஞர் “எகிப்தின் முதல் வமிசத்து மன்னன் சிந்து சமவெளிப் பகுதியிலிருந்து வந்த தமிழர்” என்கிறார்.
நன்றி :- மஞ்சை வசந்தன் (http://manjaivasanthan.blogspot.in/)
மேலும் பல தகவல்களுக்கு இணைந்திடுங்கள் :-

எகிப்தில் வாழ்ந்தவர்கள் தமிழர்கள்!!!

Wednesday, January 13, 2016

தமிழர் அறுவடைத் திருநாள்(பொங்கல்) வாழ்த்துகள்
*****************************************************************************
சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை. –திருக்குறள்
(உழுதலான் வரும் மெய் வருத்தம் நோக்கிப் பிறதொழில்களைச் செய்து திரிந்தும், முடிவில் ஏர் உடையார் வழியதாயிற்று உலகம்; ஆதலான் எல்லா வருத்தம் உற்றும், தலையாய தொழில் உழவே.)
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாந்
தொழுதுண்டு பின்செல் பவர் – திருக்குறள்
(யாவரும் உண்ணும் வகை உழுதலைச்செய்து அதனால் தாமும் உண்டு வாழ்கின்றாரே தமக்குரியராய் வாழ்கின்றவர்; மற்றையார் எல்லாம் பிறரைத் தொழுது அதனான் தாமும் உண்டு அவரைப் பின்பற்றிச் செல்கி்ன்றவர்.)
அறுவடைத் திருநாள் விழா தை பொங்கல் என தமிழர்களால் கொண்டாடப்படும் விழா.
முழுவதும் வேளாண்மை சார்ந்த விழாவாக சங்க காலத்தில் 28 நாட்கள் நடைபெற்ற இவ்விழா இன்று நான்கு நாட்கள் மட்டுமே கொண்டாடப்படுகிறது.
மார்கழி கடைசி நாள் - போகி திருவிழா :
*****************************************************
தமிழர்கள் தங்களின் பெரும் விழாக்களை தொடங்கும் முன் தங்களின் முன்னோர்களான தெய்வ நிலைக்கு உயர்த்தப்பட்ட தமிழ் வேந்தர்களை (தெய்வ+வேந்தன் => தெய்வேந்திரன் => தேவேந்திரன - இந்திரன்) வணங்கியே எந்த விழாவையும் தொடங்குவர்.
மார்கழி கடைசி நாள் தெய்வ வேந்தனாகிய "போகி" என அழைக்கப்படும் இந்திரனுக்கு விழா எடுக்கும் நாள்.
வேளாண்மையின் முக்கிய ஆதாரமான மழையைக் கொடுக்கும் கடவுளாக வேந்தன் இந்நாளில் நன்றி செலுதப்படுகிறார்.
தமிழர் வேந்தனை வணங்கும் இந்நாளை குப்பை எரிக்கும் நாள் என முட்டாள் தனமான பொருளோடு திரித்தவர்கள் தமிழர்களை வீழ்த்திய திராவிட திருட்டுக் கூட்டம். இன்னும் பல குடிகளிடம் பல பகுதிகளில் இந்நாளில் பொதுவாக அணைத்து சாமிகளையும் மாலையில் வீட்டில் பூசை செய்து வணங்குகின்றனர். உண்மையில் வ

தமிழர் அறுவடைத் திருநாள்(பொங்கல்) வாழ்த்துகள்

Sunday, December 6, 2015

Tamil Novels Written by Writer Sujatha 
No.Book TitleAuthor
  Download                 
1Amma mandapamSujatha
Free Tamil eBooks
2ArangetramSujatha
Free Tamil eBooks
3ArisiSujatha
Free Tamil eBooks
4CurfewSujatha
Free Tamil eBooks
5EldoradoSujatha
Free Tamil eBooks
6Eppadiyum vazhalamSujatha
Free Tamil eBooks
7Film utsavSujatha
Free Tamil eBooks
8IlaneerSujatha
Free Tamil eBooks
9JannalSujatha
Free Tamil eBooks
10KaalgalSujatha
Free Tamil eBooks
11KaaranamSujatha
Free Tamil eBooks
12NagaramSujatha
Free Tamil eBooks
13En Iniya EndhiraSujatha
Free Tamil eBooks
14MerinaSujatha
Free Tamil eBooks
15Sujatha SirukadhaigalSujatha
Free Tamil eBooks
16Katradhum Petradhum (Vikatan)Sujatha
Free Tamil eBooks
17Kadavul IrukkiraraSujatha
Free Tamil eBooks

Tamil Novels Written by Writer Sujatha

Sunday, November 29, 2015

அப்பன் பாடியதும் ! சுப்பன் பாடியதும் !
அப்பன் பாடியது !
முதல் சங்கத்தில் புலவனாகி தமிழாராய்ந்த தாழ் சடையானே பின்னர் மதுரையில் திருவிளையாடல் புரியும் பொருட்டு...! செண்பகப் பாண்டியனுக்கு ஏற்பட்ட சந்தேகமான "பெண்களின் கூந்தலுக்கு இயற்கையில் மணம் உண்டா?" என்பதற்கு மணம் உண்டு எனும் பொருளில் பாட்டெழுதி தருமி மூலம் நக்கீரனிடம் விளையாடிய கதை நாம் அறிந்ததே ! அப்பாடல் குறுந்தொகையில் இரண்டாம் பாட்டாய் இன்றும் உள்ளது !

"கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி காமம் செப்பாது கண்டது மொழிமோ பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற் செறி எயிற்று அரிவை கூந்தலின் நறியவும் உளவோ நீ அறியும் பூவே"
தேன் தேடும் வாழ்க்கை கொண்ட அழகிய சிறகுகளை உடைய தும்பியே! தேன் உன்னும் காம ஆசையால் சொல்லாமல் உண்மையாக நீ கண்டதைச் சொல். இவள் என்னிடம் பயின்றதைக் கெழுதகை நட்பாகக் கொண்டவள். அவளும், அவள் கூந்தலும் மயிலின் இயல்பைக் கொண்டவை. அவற்றைக் காட்டிலும் நல்ல மணமுள்ள பூக்கள் இருக்கின்றனவா? - என்கிறான்.
சுப்பன் பாடியது !
பொய்யாமொழி எனும் புலவனொருவன் தன்னிடம் வந்து முருகன் மேல் பாட்டொன்று பாடக் கேட்டவரிடம் " அப்பனை பாடிய வாயால் சுப்பனை பாடேன் ! கோழியை பாடிய வாயால் குஞ்சைப் பாடேன் என்று கூற !
பின்னாளில் ஒரு முறை இவர் காட்டினூடே செல்லுங்கால் முருகன் வழிப்பறி வேடனாய் வழிமறிக்க !
பொய்யாமொழி “அப்பா! வேடனே, நான் புலவன்; என்னை இடர்ப்படுத்தாதே” என்று கூறினார்.
“என் மீது ஒரு கவி பாடு” என்றான் வேடன்
“உன் பேர் யாது?” என்று கேட்டார் புலவர்;
“என் பேர் முட்டை” என்றான்
"பொன்போலுங் கள்ளிப் பொறிபறக்குங் கானலிலே என்பேதை செல்லற் கியைந்தனளே – மின்போலும்
மானவேல் முட்டைக்கு மாறாய தெவ்வர்போம் கானவேல் முட்டைக்குங் காடு"
நற்றாயிரங்கல் என்ற துறையில் முட்டையென்ற பேர் வருமாறு இப்பாடலைப் பொய்யாமொழி பாடினார்.
வேடனாக வந்த வேலன், “ஐயா! நின் பாடலில் பெருங்குற்றம் உளது. பால் நிரம்பிய கள்ளி தீப்பற்றி எரியும் கானகத்தில் ஈரமில்லாத வேலமுள் சாம்பலாகாமல் காலில் தைக்குமா? நான் உன்மீது பாடுகின்றேன் கேள்.”
"விழுந்ததுளி அந்தரத்தே வேமென்றும் வீழின்
எழுந்து சுடர்சுடும் என்றும் – செழுங்கொண்டல்
பெய்யாத கானகத்திற் பெய்வளையுஞ் சென்றனளே
பொய்யா மொழிப்பகைஞர் போல்"
என்று பாடினார்.
கோழியை பாடிய வாயால் குஞ்சைப் பாடேன் என்றனையே இப்போது முட்டையை பாடினையே ! என்று முருகன் தன்னுரு காட்ட புலவன் செருக்கழிந்தது !
இப்படி அப்பனும் சுப்பனும் பாடிய பாடல்கள் இன்றும் நமக்கு கிடைக்கப் பெறுகின்றன

அப்பன் பாடியதும் ! சுப்பன் பாடியதும் !

Wednesday, November 25, 2015

முதன் முதலில் கப்பலோட்டி உலகை வென்ற இராஜராஜ சோழனின் கப்பற்படைப் பற்றிய அரிய தகவல்கள் !!!
இராஜராஜ சோழன் என்றாலே காலாற்படை முதல் யானை படை வரை நடுநடுங்கிப் போகும். வானுயர் வெற்றிகளை முடிசூடிய மாமன்னன் என்றால் சாதாரணமா என்ன!
பண்டையக் காலத்திலேயே கப்பற்படை வைத்து உலகை ஆட்டம் காண வைத்த பேரரசு, சோழ பேரரசு!
ஒரு வருடம், இரண்டு வருடம் அல்ல,
ஆயிரம் வருடங்களாக கப்பற்படையை வைத்து ராஜாங்கம் நடத்தியப் பெருமை உலகிலேயே சோழ சாம்ராஜ்யத்திற்கு மட்டும் தான் இருக்கிறது.
=========
"கனம்"
இந்த கப்பற்படையில் நிறைய போர் வீரர்களை கொண்ட குழு ஒன்று பிரிக்கப்பட்டிருக்கும், அவர்களை "கனம்" என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். அவர்களை தலைமை தாங்கி இருந்தவரை, "கனாதிபதி" என்று அழைக்கப்பட்டிருக்கிறார்.
=========
"கன்னி"
தமிழில் "கன்னி" என்பதற்கு இளம் மங்கை என்று மட்டும் பொருள் அல்ல, "பொறி" என்ற மற்றொரு பொருளும் இருக்கின்றது. எதிரிகளை பொறி வைத்துப் பிடிக்கும் கப்பற்படை வீரர்களை, "கன்னி" என்று அழைத்திருக்கின்றனர். இவர்கள் தான் சிறப்பு பணியில் நியமிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களை நிர்வாகிப்பவர், "கலபதி" என்று அழைக்கப்படுவார்
=========
"ஜதளம்" அல்லது "தளம்"
கப்பற்படையில் சக்தி வாய்ந்த குழுவாக திகழ்பவர்களை, ஜதளம் என்பார்கள். சுருக்கமாக இவர்களை "தளம் என்றும் குறிப்பிடுகிறார்கள். இவர்களை நிர்வகிப்பவர், "ஜலதலதிபதி" என்னும் நபர் ஆவார்.
=========
"மண்டலம்"
கப்பற்படையின் பாதி நிரந்திர போர் குழுவை, மண்டலம் என்று குறிப்பிடுகிறார்கள். இவர்களை தலைமை வகிக்க மண்டலாதிபதி என்பவர் நியமிக்கப்பட்டிருப்பார். இந்த பிரிவிடம் 40 முதல் 50 கப்பல்கள் வரை இருக்கும். இவர்கள் தனி, தனியாகவும், குழுவாகவும் சென்று போர் புரிவதில் வல்லமைப் பெற்றவர்கள்.
நிரந்திர போர் பிரிவு நாம் முன்பு குறிப்பிட்டிருந்த, "கனம்" பிரிவை சேர்ந்தவர்கள் தான் நிரந்திர போர் பிரிவை சேர்ந்தவர்கள். இவர்களிடம் 100 இருந்து 150 கப்பல்கள் வரை இருக்கும். மூன்று "மண்டலம்" குழுவை உள்ளடக்கி இருக்கும் குழுவானது "கனம்" என்று கூறப்படுகிறது.
=========
"அணி"
பெரிய போர்களில் ஈடுபட மட்டுமே உபயோகப்படுத்தப்படும் குழுவை "அணி" என்று கூறுகின்றனர். ஒரு அணியில் மூன்று "கனம்" குழு உள்ளடங்கி இருக்கும். 300-500 கப்பல்கள் வரை இந்த குழுவில் இருக்கும். மாபெரும் அணியான இதை தலைமை தாங்குபவர், "அணிபதி" என்று அழைக்கப்படுவர்.
=========
"அதிபதி"
இதெல்லாம் போக இந்த அனைத்து குழுக்களையும் தலைமை தாங்கும் நபர் தான் "அதிபதி". இவரின் கட்டளைகளுக்கு இணங்க அனைத்து குழுக்களும் இயங்கும்.
இவர் இளவரசருக்கு கீழ் இருப்பவர்.
கைப்பற்றிய பகுதிகள் இந்த மாபெரும் கப்பற்படையை வைத்து தான், இந்தோனேசியா, ஜாவா, மாலத்தீவு, சிங்கப்பூர், இலங்கை, ஆங்கோர், கடாரம் போன்ற பல பகுதிகளை வென்றுள்ளது சோழப் பேரரசு.
=========
"நாவாய்"
பண்டைய தமிழர்களின் "நாவாய்" என்ற கப்பற்படையின் பெயர் தான் ஆங்கிலத்தில் "நேவி" (Navy) என்று அழைக்கப்படுகிறது.
=========
நன்றி :
யாழ் யாழினி

முதன் முதலில் கப்பலோட்டி உலகை வென்ற இராஜராஜ சோழனின் கப்பற்படைப் பற்றிய அரிய தகவல்கள் !!!

the hindu


உலகம் முழுவதையும் சோழ சாம்ராஜ்யமாக்க வேண்டும் என்ற உணர்வுகொண்டவர் ராஜராஜ சோழனின் மைந்தன் ராஜேந்திர சோழன். ‘பூர்வ தேசமும் கங்கையும் கடாரமுங் கொண்ட கோப்பர கேசரி வர்மன்’ என்று அவரைப் புகழ்கின்றன சோழர் கால கல்வெட்டுகள்.
கர்நாடகத்தின் குடமலை நாடு தொடங்கி வங்காளம் வரை வெற்றிகளைக் குவித்தார் ராஜேந்திரன். கடல் கடந்தும் படை நடத்தினார். இலங்கையையும் கடாரம் என்று அழைக்கப்பட்ட மலேசியாவையும் வென்றார். அவர் போர் நடத்திச் சென்ற இடங்களின் தடங்களைக் காண்பதும் அவரால் எழுப்பப்பட்ட அடையாளச் சின்னங்களை ஆவணப்படுத்துவதற்காக ஒரு பயணத் திட்டம் உருவாகி உள்ளது.
‘ராஜேந்திர சோழன் கங்கை படையெழுச்சியின் தடம் காணும் பயணம்’ என்ற பெயரில் இந்தப் பயணத்தை - கங்கை கொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுமம் ஆரம்பித்துள்ளது எனும் 14-10-15-ல் கங்கை கொண்ட சோழபுரம் ஸ்ரீ பிரகதீஸ்வரர் ஆலயத்திலிருந்து இது தொடங்கியது. தொல்லியல் பரப்பாய்வுத் துறையின் முன்னாள் இயக்குநர் பி.வெங்கடேசன் தலைமை தாங்கினார். கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுமத்தின் தலைவர் கோமகன், சென்னைப் பல்கலைக்கழகத் தொல்லியல் துறையின் உதவிப்பேராசிரியர் ஜெ.சவுந்தரராஜன், அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர்கள் எஸ். கண்ணன், ஜே.ஆர். சிவராமகிருஷ்ணன், தொல்லியல் ஆர்வலர் ஜி. சசிதரன், வரலாற்று ஆர்வலர் எம். ரமேஷ், ராஜேந்திர சோழன் ஆவணப்பட இயக்குநர் குணவதி மைந்தன் இவர்களோடு நானும் பங்கேற்றேன்.
சோழ கங்கத்தின் சிறப்பு
கங்கைகொண்ட சோழபுரம் ஸ்ரீ பிரகதீஸ்வரர் ஆலயத்தில் உள்ள முக்கியமான வரலாற்றுச் சின்னங்களை காட்டினார் வெங்கடேசன். அதில் ஒன்று, சூரியப் பிரபை. ஒரே கல்லால் ஆன ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தின் சிற்பம். இது வங்கப் போரின்போது அங்கிருந்து ராஜேந்திரனால் கொண்டுவரப்பட்டது. இன்னொன்று, எட்டுக் கைகளைக் கொண்ட கலிங்க துர்க்கை. இது கலிங்கத்திலிருந்து கொண்டுவரப்பட்டது. “இது போல எட்டு சிலைகள் கொண்டுவரப்பட்டுள்ளன. எஞ்சி இருப்பது இது மட்டும்தான்” என விளக்கினார் கோமகன்.
கங்கையை வெற்றி கொண்டதன் அடையாளமாக ராஜேந்திரன் நிறுவிய சோழ கங்கம் (பொன்னேரி) ஏரியை நோக்கிப் புறப்பட்டது பயணக் குழு. அதன் சிறப்பை விளக்கினார் வெங்கடேசன். “மன்னர்கள் வெற்றிபெற்ற இடங்களில்தான் வெற்றிச் சின்னங்களை நிறுவுவது வழக்கம். ஆனால், ராஜேந்திர சோழன், இங்கே வந்து இந்த ஜல ஸ்தூபியை நிறுவியிருக்கிறார். திருவாலங்காட்டுச் செப்பேடு “பகீரதன் தனது சகோதரர்களுக்கும் தந்தைக்கும் மோட்சம் கொடுப்பதற்காகப் புனித கங்கையைப் பூமிக்குக் கொண்டுவந்தான். அதை ராஜேந்திரன் தனது பராக்கிரமத்தால் இங்கு கொண்டுவந்தான் என்கிறது” என்றார்.
கூடுதுறையில் சோழர் கோயில்
கர்நாடகத்தை நோக்கிப் பயணம் தொடர்கிறது. வழியில் எதிர்கொள்கிறது பவானியின் கூடுதுறை. குடகில் பிறந்ததும், ‘வான் பொய்ப்பினும் தான் பொய்யாக் காவிரி’ என்று பட்டினப்பாலை சிலாகிப்பதுமான காவிரியும் மேற்கு தொடர்ச்சி மலையில் ஜனிக்கும் பவானியும் கூடுகிற இடம் இது. இங்கேயும் சோழர்கள் காலத்தில் கோயில் எழுப்பப்பட்டுள்ளது. அது சங்கமேஸ்வரர் கோயில். இப்போது இந்தக் கோயில் எடுத்துக் கட்டப்பட்டுவிட்டபோதும் சோழர்கள் கட்டிய பழைய கோயில் காவிரிக் கரையில் இருக்கிறது. சிதிலமடைந்த நிலையில் இருக்கும் இந்தக் கோயிலில் காயத்திரி லிங்கேஸ்வரர் வடக்கே பவானி - காவிரி சங்கமத்தைப் பார்த்தபடி அமர்ந்திருக்கிறார்.
பண்ணாரி நோக்கிப் பயணம் தொடர்கிறது. திம்மம் மலை உச்சியை அடைகிறோம். “நாம் கடல் மட்டத்திலிருந்து 2,656 அடி உயரத்தில் இருக்கிறோம்’’ என்றார் சிவராமகிருஷ்ணன்.
வீரக்கற்கள்
மலை உச்சியிலிருந்து இறங்கும் சாலையில் சற்று தூரம் போனால், தாளவாடி வந்து விடுகிறது. “இந்தப் பகுதிக்கு ஏற்கெனவே ஆய்வுக்கு வந்திருக்கிறேன். இந்தப் பகுதியில் போரில் இறந்த வீரர்களுக்கு வைக்கப்படும் நடுகற்கள் இருக்கு” என்று ஆர்வமூட்டுகிறார் வெங்கடேசன். வழியில், எப்போதாவது தண்ணீர் ஓடும் சொர்ணமுகி ஆறு குறுக்கிடுகிறது. அதைக் கடந்தால் தொட்டுவிடும் தூரத்தில் தொட்டகஜனூர்.
சற்றுத் தூரத்திலேயே சாலையின் வலது ஓரத்தில் இரண்டு நடுகற்கள். ஒட்டுமொத்தக் குழுவும் அதைச் சூழ்ந்துகொண்டு ஆர்வத்தோடு ஆராய்கிறது. “போரில் இறந்த வீரர்களுக்கு வைக்கப்படும் வீரக் கல்தான் இது” என்கிறார் வெங்கடேசன். “சோழர் காலத்துக் கல்லாக இருக்க முடியாது. சோழர்கள் வீரக் கற்களில் சிவலிங்க வடிவத்தைச் செதுக்கியதாகத் தரவுகள் இல்லை. இது 13-ம் நூற்றாண்டுக்குப் பின்பு ஹொய்சாளர்களோ விஜயநகரப் பேரரசர்களோ வைத்திருக்கலாம். போர் வீரனுக்குத்தான் என்பதில்லை. அந்தக் காலத்தில், வட்டாரத் தலைவர்கள் இறந்தால்கூட கற்கள் நடப்பட்டிருக்கலாம்’’ என்கிறார் கண்ணன். தாளவாடி நோக்கித் திரும்புகிறது பயணம்.
- பயணம் தொடரும்

சோழர் படை சென்ற பாதை: கங்கை கொண்ட வரலாற்றைத் தேடி... - புதிய குறுந்தொடர்